Ashokamitran Sirukathaigal 1.0

Licencji: Wolna ‎Rozmiar pliku: N/A
‎Ocena użytkowników: 0.0/5 - ‎0 ‎Głosów

Ashokamitran (ur. 22 września 1931) – jedna z najbardziej wpływowych postaci w literaturze tamilskiej. Swoją karierę literacką rozpoczął od nagrodzonej sztuki "Anbin Parisu", a następnie wielu opowiadań, powieści i powieści. Jest wybitnym eseistą i krytykiem, redaktorem czasopisma literackiego "Kanaiyaazhi". Napisał ponad 200 opowiadań, osiem powieści, około 15 powieści oprócz innych pism prozy. Większość jego prac została również przetłumaczona na język angielski.

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுக#2970;ிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.

historia wersji

  • Wersja 1.0 opublikowany na 2014-11-09

Szczegóły programu